லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட குறைக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாய்க்கும் அதிக தொகையில் குறைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.