மாத்தறை வெலிகம – பெலேன ரயில் கடவையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வேன் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் வேனின் சாரதி மட்டுமே இருந்ததாகவும், அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ரயில் கடவையில் நிறுவப்பட்ட எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.