இந்தியாவில் யூடிப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற பெண் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (வயது – 18) என்ற பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த பெண்ணின் உடல் எடை அண்மைக்காலமாக அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் உடல் எடையை குறைப்பதற்காக யூடிப் பார்வையிட்டு டயட் மேற்கொண்டுள்ளார்.
சில காலத்திற்கு பின்னர் குறித்த பெண்ணின் உடல் மெலிந்து வந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார். மேலும் தீவிரமாக உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் குறித்து வைத்தியர்கள் தெரிவிக்கையில், குறித்த பெண் உடல் எடை குறைப்பதற்காக உணவு உண்ணாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக குடல் சுருங்கி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.