பொலன்னறுவை – புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பால பிரதேசத்தில் மான் இறைச்சி மற்றும் உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை, தம்பால பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புலஸ்திபுர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனைக்குட்படுத்திய நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ 600 கிராம் மான் இறைச்சி, உள்நாட்டு துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.