மீகொட பகுதியில் சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ ( 46 வயது), உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகொட – ஆட்டிகல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வேன் ஒன்றில் வந்த மர்ம நபர்களால் அவர் சுடப்பட்டார்.
இதனையடுத்துஅவர் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.