நாட்டில் அனைத்து நகரங்களிலும் காற்றின் தரம் இன்று புதன் கிழமை மிதமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு, வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காற்றின் தரம் 56 – 96க்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் காணப்படும், குறிப்பாகக் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி மணி வரை காற்றுத் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.