மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் “மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்” எனும் செயற் திட்டத்தின் கீழ் அல் ஹாஜ் கலீல் முஸ்தபாவினால் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்தாரினால் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் இது தொடர்பாக மருதமுனை “மரு கெபிட்டல்” விளையாட்டு கழகம் மற்றும் பர்வின் ரெடிங், லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் கலீல் முஸ்தபாவுடனான கலந்துரையாடல் மருதமுனை பிரதான வீதி முஸ்தபா கட்டிட தொகுதியில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது.
இதன் போது மருதமுனை “மரு கெப்பிட்டல்” விளையாட்டு கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள் மற்றும் கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால உதவிகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


