வெலிகந்த, சிறிபுர, ஹுங்கமலா ஓயா வனப் பகுதியில் காணப்படும் மரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 தானியங்கி துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, மரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தத் துப்பாக்கியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.