மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள மதகின் கீழ் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள மதகினுள் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர்
எனினும் சடலம் மதகினுள் குப்புற விழுந்த நிலையில் கிடப்பதால் குறித்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மட்டு தலைமையக பொலிஸார் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.