மட்டக்களப்பு -வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில் பாடசாலை மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.