மட்டக்களப்பு ஊரணி பகுதியில் அமைந்துள்ள அக்னி ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பம் ஆன கிரிக்கெட் சுற்று போட்டிகள் பகல் இரவு ஆட்டங்களாக இடம்பெற்றது.
புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள பல பிரபல்யமான புகைப்பட கலையகங்கள் குறித்த போட்டியில் பங்குபற்றி இருந்தன.
மட்டக்களப்பு இளைஞர் ஒன்றியத்தின் முன்னால் தலைவர் பகேஷ் தலைமையில் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முதலாவது இடத்தை மட்டக்களப்பு டிலான் ஸ்டுடியோ பெற்றுக்கொண்டதோடு இரண்டாம் இடத்தை கல்கி ஸ்டுடியோவும், மூன்றாம் இடத்தை கிளிக் ஸ்டுடியோவும் பெற்றுக்கொண்டமை குறிபிடத்தக்கது.





