ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரையடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.69 அமெரிக்க டொலராக அதிகரிப்பையும் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.23 அமெரிக்க டொலராக நிலவுகிறது.