போக்குவரத்து விதிமீறலுக்காக பேருந்து சாரதி ஒருவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வீடியோ வைரலானதை அடுத்து, வெலிக்கடை பொலிஸார் குறித்த பேருந்து சாரதியை கைது செய்துள்ளனர்.
அதன்படி தில்ஷான் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் அபராதத்தை வழங்கிய பின்னர் வீதியில் இருக்க வேண்டாம் என அதிகாரியை எச்சரிப்பது போல் குறித்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
குறித் வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.










