ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இன்று செவ்வாய் கிழமை பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நேர்ந்தமைக்கான காரணம் இது வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.