பிடிகல பிரதேசத்தில் தான் பெற்ற 15 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு இருபது வருட கடூழிய சிறைத்தண்டனையும், சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் இருபதாயிரம் ரூபா அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் நட்டஈடு மற்றும் அபராதம் செலுத்தாவிடின், தலா ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை 6 மாதங்கள் அளிக்குமாறு பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
பொரவாகம, ஜொங்கலவத்தை, ரணேபுர ஹெவே பகுதியைச் சேர்ந்த சுசந்த என்பவருக்கே மேற்படி சிறைத்தண்டனை, நட்டஈடு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்த போது பதினைந்து வயது மகளை தந்தையின் காவலில் விட்டுச் சென்றதாகவும், 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் தந்தை தான் பெற்ற மகளையே பல சந்தர்ப்பங்களில் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தையின் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்வை பொறுத்துக்கொள்ள முடியாத மகள் அயலவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சந்தேகத்தின் பேரில் தந்தையை பிடிகல பொலிஸார் விசாரணைக்காக கைது செய்து, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து தற்போது சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.










