பெல்ஜியத்தின் ஓடனார்ட் பகுதியில் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 63 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த கிறிஸ்துமஸ் மரம் 20 மீட்டர் (66 அடி) உயரமுள்ளது என்று கூறப்படுகிறது.