இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை நேற்று புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு கடந்த காலங்களில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் மறு அறிவித்தல் வரை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபா வரி விதித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.