-மஸ்கெலியா நிருபர்-
ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹொன்சி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் பாதையை கடப்பதற்கு பாதசாரி கடவை இல்லாமல் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்களும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பாதையில் பயணிக்கும் பேருந்துகளும் தரிப்பிடத்தை தவிர்த்து பாடசாலையில் நுழைவாயிலில் பேருந்தை தரிப்பதனால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பாதயை கடப்பதிற்கும் நடப்பதற்கும் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக உரிய நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் ஹட்டன் நகர சபை முதல்வர் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
