பாடசாலை நற்சிந்தனைகள்

பாடசாலை நற்சிந்தனைகள்

குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.

மலைபோல தடைகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியை மட்டும் கைவிடாதீர்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை இலக்காக கொண்டு முன்னேறுங்கள்.

நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை.. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.
அரிய பெரிய விஷயங்களை தியாகமனம் படைத்தவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.

உடலில் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் ஏதும் உண்டாகாது. மாறாக, அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் மனதில் ஊக்கத்தை  வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உயர முடியும்.

முயற்சி என்பது ஒன்றும் இல்லை நீ தினம் இரவில் என்னவாக ஆக வேண்டுமென்று கனவு காண்கிறாயே அதை நிஜமாக மாற்றுவது தான்.

வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.

புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மெளனமாகிவிடும்.
இலக்கியம் ஊமையாகிப்போகும். மனிகம் புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.

எந்த ஒரு செயல்களிலும் பொறுமை இழக்காமல் அதேசமயம் முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால் உனக்கான சோதனைகள் சாதனைகளாக மாறும் தூரம் தொலைவில் இல்லை.

சுமக்கத் தெரிந்து கொண்டால் சுமைகள் சுலபம் தான், சாதிக்கப் பழகி விட்டால் தடைக்கல்லும் படிக்கல் தான்.

ஒவ்வொரு தோல்விக்கும்
அடுத்தவரை குறை சொல்லும்
பழக்கம் இருந்தால் வெற்றி
என்பது எப்போதும் எட்டா
கனியாகவே இருக்கும்.

திட்டம் இல்லாமல்
தொடங்கப்படும் நாள்
மன நிறைவோடு முடிவதில்லை.

ஒவ்வொரு சவாலையும்
எதிர்கொண்டு வெற்றி பெறும்
போது உங்களின் வலிமையையும்
தன்னம்பிக்கையும் அதிகரிக்கின்றது.

தேவையற்ற விடயங்களை
சிந்தித்து கொண்டிருந்தால்
தேவையான விடயங்களை
சிந்திக்க நேரம் இருக்காது.

கடமையை செய்யாமல்
நேரத்தை வீணடிப்பது..!
உங்களுக்கு நீங்களே
செய்யும் மாபெரும் துரோகம்

பயனில்லாத செயலும், சிந்தனையும் விவேகமற்று நடப்பதும் ஆத்தும துரோகமாகும்.

எந்த இக்கட்டான
சூழ்நிலையிலும் நீங்கள் சாதிக்க
பிறந்தவர் என்பதை நினைவில்
வையுங்கள்

நல்லதே நடக்கும் என்று
சொல்லாமல் நல்லதே நடக்கிறது
என்று சொல்லுங்கள்..!

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்