பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடியில் கடை ஒன்றினை உடைத்து 6 இலட்சம் ரூபா காசு, கேமரா சேமிப்பகம் என்பவற்றை திருடியமை, யாழில் கருவாட்டுக்கடை ஒன்றினை உடைத்து அங்கு திருடியமை, சாவகச்சேரியில் தொலைபேசி கடை ஒன்றினை உடைத்து 96 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் 2 கைபேசிகளை குறித்த சந்தேகநபர் திருடியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும், உப பொலிஸ் பரிசோதகர் திரு.மயூரன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது திருடப்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.