பொலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான் இரத்த நாள வீக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
59 வயதாகும் சல்மான் கான் சமீபகாலமாக உடல் சோர்வுடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.
ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal neuralgia) என்ற நோய் காரணமாக, தனது மூளையில் இரத்த நாள வீக்கப் பிரச்சனை உள்ளது என்றும், மற்றும் ஏ.வி. மால்பார்மேஷன் (Arteriovenous malformation) என்ற பிரச்சனையும் தனக்கு இருப்பதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
சல்மான்கான் குறிப்பிட்ட, ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal neuralgia) என்ற நோயின் தாக்கத்தினால், முகத்தில் அடிக்கடி வலி ஏற்படும் என்பதும், இந்த நோயை மருத்துவ உலகில் ‘தற்கொலை நோய்’ எனவும் அழைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நடிகர் சல்மான்கான் கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
சினிமா மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஹிந்தியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.