நுவரெலியா பகுதியில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 1 கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் பவுசர் ஒன்றினை கோயிகா (KOICA) மற்றும் யூஎன் ஹெபிடாட் (UN – HABITAT) நிறுவனங்கள் ஒன்றினைந்து உத்தியோகபூர்வமாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை கையளித்துள்ளது.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் கோயிகா நிறுவனத்தின் பணிப்பாளர் கிம் , யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் முகாமையாளர் சலிம் கறீம் சாடா மற்றும் இரு நிறுவனத்தின் ஏனைய உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.