-நானுஓயா நிருபர்-
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கெலேகால பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற தனியார் பேருந்துடன் மோதி கெலேகால பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடனும் மோதி வீதியில் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


