போலியான வட்சப் செயலி தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதன் மூலம் பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட்சப் செயலி போலவே இருக்கின்ற குலோன் செய்யப்பட்ட வட்சப் செயலி அதிக எண்ணிக்கையிலான மக்களிடத்தில் தற்போது பயன்பட்டு வருகின்றது. ஜி.பி வட்சப் என்கின்ற பெயரில் இருக்கின்ற இந்த செயலி பல தவறுகளை செய்து வருவதாக சைபர் கிரைம் நிறுவனமான இசெட் (eset) தெரிவித்துள்ளது.
இது போன்று போலி மற்றும் பாதுகாப்பற்ற செயலிகள் மூலம் நீங்கள் பேசுவதை உங்கள் தொலைபேசிகளில் இருந்து ரெக்கோர்ட் செய்து கொள்ள முடியும் .அது மாத்திரம் அல்லாமல் வீடியோகளையும் ரெக்கோர்ட் செய்து கொள்ள முடியும்.இந்த செயலி பிளேஸ்டோரில் இல்லை என்றாலும், இணையத்தில் பல வழிகளில் இருந்து ஊடுருவி வருகின்றது எனவே இந்த செயலி தொடர்பில் விழிப்புடன் இருப்பது அவசியமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.