நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று திங்கட்கிழமை,
22 கரட் தங்கத்தின் விலை 150,800 ரூபா.
24 கரட் தங்கத்தின் விலை 163,000 ரூபா.
கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 165,000 ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றமை, உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டமை போன்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.