-யாழ் நிருபர்-
யாழ். நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 07.00 மணிக்கு நடைபெற்றது.
எண்ணெய் சாத்தும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிசேகத்தை தொடர்ந்து 45 தினங்கள் மண்டலாபிசேகம் இடம்பெறும்.
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்தபக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.











