தேசிய வெசாக் வாரம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் இன்று வெள்ளிக்கிழமை வரை தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
தேசிய வெசாக் வாரத்தின் இறுதி தினமான இன்று சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நுவரெலியா, ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் உள்ள விகாரைகளில் விசேட வழிபாடுகள், சமய நிகழ்வுகள் போன்றன இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
https://minnal24.com/