ஹட்டன், ஷானோன் வட்டா பகுதியில் உள்ள லையன் வீட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவல் 24 லையன் வீடுகளில் பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
காயமடைந்தவர்கள் டிக் ஓயா மற்றும் நாவலப்பிட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார், ஹட்டன் தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.