தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்றில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் போது தனுஸ்க லக்மால் ஜயதிலக்க (வயது – 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பட்டாசு விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.