இலங்கையில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
அதன்படி மிகவும் சிறிய வகை எலுமிச்சை ஒரு கிலோ கிராம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகர காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கையில்,
தற்போது சந்தையில் எலுமிச்சை தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலைகளால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.