
ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காகைச்சாத்து
ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 15 % தீர்வை வரியை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார் .
அமெரிக்க ஜனாதிபதி தனது ட்ரூத் சோஷியல் கணக்கில்இதுதொடர்பில் பதிவிட்டுள்ளார் .
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஜப்பானிய முதலீட்டில் 550 பில்லியன் டொலரை கொண்டுவரும் என எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் அமெரிக்காவுக்கு நல்ல காலத்தைத் தரும் என்றும் ஜப்பானுடனான உறவுகளை மேம்படுத்தும் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பான் , தென் கொரியா உட்பட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 % தீர்வை வரியை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் தீர்மானித்திருந்தார்.
இந்த வரிகள் விதிப்பு தொடர்பில் டிரம்ப் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டிருந்த நிலையில், இந்த வரிகள் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது .
