சுமத்ராவில் தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகளை எற்ற சிறப்பு நிவாரண விமானம்

சுமத்ராவில் தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகளை எற்ற சிறப்பு நிவாரண விமானம்

இந்தோனேசியாவின் சுமத்ராவில் அவசரமாக தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் செல்ல, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) இந்தோனேசியாவின் சுமத்ராவில் உள்ள மேடன் கோலா நமு சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு நிவாரண விமானம் புறப்பட்டது.

நேற்று 5 ஆம் திகதி மாலை கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, விமானம் இந்தோனேசியாவின் மேடன் கோலா நமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் பழுதுபார்ப்புக்கு கணிசமான நேரம் எடுக்கும் என்று இந்தோனேசிய விமான நிலைய அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டதையடுத்து விமானத்திலிருந்த 101 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் செல்ல, இந்த சிறப்பு நிவாரண விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.