தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.