லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்விலை குறைப்பு நாளை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு தொகையினால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை தற்போது சந்தையில் 4,551 ரூபாவாக காணப்படுகிறது.