உதயம் கனடா கலாச்சார சங்கத்தின் கோடை ஆண்டு -2025 நிகழ்வு அன்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது என உதயம் கனடா அமைப்பின் தலைவர் ராம்போ தர்மலிங்கம் தெரிவித்தார்.
இந்த அமைப்பானது 2011ஆம் ஆண்டு முதல் தாயகத்திலுள்ள மாணவர்களின் கல்வி தொடர்பிலும் சிறுதொழில் ஊக்குவிப்பு சிறுவீடுகள் அமைக்க உதவி, மற்றும் சைக்கிள்,வீல்செயார், தையல்மெசின், கணனிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றது.
கடந்த மாதம் சமீபத்தில் (02-07-2025) மூதூர் மாவட்டத்திலுள்ள சின்னகுளம் கிராமத்தில் கல்வி கற்க 8 கிலோ மீற்றர் நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு சைக்கிள்களை அன்பளிப்பு செய்துள்ளது.
இவ் உதவி திட்டத்திற்கு அமைப்பிலுள்ள முக்கியஸ்தர்கள் உதவிகளை வழங்கி உள்ளனர். என நிறுவனர் சூரியகுமார் நல்லநாதன் தெரிவித்தார்.


