மட்டக்களப்பு பாடுமீன் பெருஞ் சமர்- 2023 (Big Match-2023) கிரிக்கெட் போட்டியானது இன்றையதினம் செவ்வாய் கிழமை மட்டக்களப்பின் பிரபல ஆண்கள் பாடசாலைகளான மட்/ புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட் / மெதடிஸ்த மத்திய கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்/ புனித மிக்கேல் கல்லூரி அணியினர் 48 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றனர். தொடர்ந்து 144 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மட் /மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் 11 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்த நிலையில் 28 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆடத்தினை தொடர்வதற்கான சூழல் காணப்படாத காரணத்தினால் ஓவர்கள், ஊட்ட எண்ணிக்கைகள் என்பவற்றை கருத்திற்கொண்டு நடுவர்களினால் இரண்டு அணிகளும் ”இணைந்த சம்பியன்களாக” அறிவிக்கப்பட்டுள்ளார்.