-மன்னார் நிருபர்-
ஐடிஎம் நெஷ்நல் கெம்பஸ் (IDM Nations Campus) இன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பக்கிங்ஹாம்ஷயர் நியு யுனிவெசிட்டி, யுகே (BUCKINGHAMSHIRE NEW UNIVERSITY, UK) இல் சட்ட இளமானி கற்கையை நிறைவு செய்த மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் ஜனாப் எம்.வை மாஹிர் சட்ட இளமானிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிறப்புப் பட்டதாரியும், முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளரும், இந்நாள் மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபரும் பிஜிடி.இடி, எம்.இடி (PGD.Ed., M.Ed) சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.