ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபா இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதே சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பதற்கு காரணம் எனவும் அதனை 25 ரூபாவாக குறைக்குமாறும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.