நத்தார் பண்டிகை காலத்தில் கேக் விற்பனை 50 வீதம் குறைந்துள்ளதாக பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியே அதற்குக் காரணம் எனவும் இந்நிலையில் கேக் ஒரு கிலோ கிராம் கொள்வனவு செய்து வந்த வாடிக்கையாளர்கள் இம்முறை அதனை 250 கிராம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.