கிழக்கு மாகாண இலக்கிய விழா 2025 விருதுப்பட்டியல் அறிவிப்பு

கிழக்கு மாகாண இலக்கிய விழா 2025 விருதுப்பட்டியல் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தின் புகழை, தமது எழுத்துக்களினாலும், சேவையினாலும், மற்றும் தம்துறைசார் செயற்பாடுகளின் மூலமும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பரவச்செய்த பணிக்காக திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தகைசால்(சார்) (வாழ்நாட்) பேராசிரியர். அ.சண்முகதாஸ் அவர்களுக்கு 2024 ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர், 2025ம் ஆண்டில் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவின் போது வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் புதன்கிழமை (11) தெரிவித்தார்.

இன்றைய தினம் அறிவிக்கப்பட்டமைக்கமைவாக, 2024ஆம் ஆண்டுக்கான வித்தகர் விருதுகளை இலக்கியத் துறைக்காக சஞ்சீவி சிவகுமார் – அம்பாறை, வில்பிரட் மைக்கல் கொலின் – மட்டக்களப்பு, ஓ. கே. குணநாதன் – மட்டக்களப்பு, எம்.ஐ.எம்.முகம்மது அஸ்ரப்- அம்பாறை, சித்தி சபீனா பைத்துல்லா- திருகோணமலை, செ. ஞானராசா – திருகோணமலை ஆகியோர் பெறுகின்றனர்.

பல்துறைக்காக தம்பிலெப்பை ஜவ்பர்கான் – மட்டக்களப்பு, க. ரவீந்திரன் (ரவிப்பிரியா)- மட்டக்களப்பு ஆகியோரும் ஆற்றுகைத் துறைக்காக திருமதி. சுசிகலாராணி ஜெயராம்- மட்டக்களப்பு, பொன்னம்பலம் குலசேகரம் -அம்பாறை, முகைதீன் வாவா சம்சுதீன்- அம்பாறை ஆகியோரும், ஊடகத்துறைக்காக சிரேஷ்ட ஒளி, ஒலிபரப்பாளர் உமர்லெப்பை யாக்கூப் – அம்பாறை பெறுகின்றார்.

நாட்டாரியல் துறைக்காக ஏ. எம். ஜபறுல்லா கான் – அம்பாறை, ஆறுமுகம் இராசரெத்தினம் – மட்டக்களப்பு ஆகியோர் விருது பெறுகின்றனர். கலை இலக்கியத ;துஐறக்காக டீ. எஸ். பி. சுசந்த அமரபந்து- அம்பாறை, மொறபிடியகே குமாரசேன- திருகோணமலை, திருமதி. எச். எம். தயாவதி – அம்பாறை ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

அத்துடன், இளங்கலைஞர் விருதுகளில் பல்துறையில் செல்வி. கத்லீன் டயனா ரவிக்குமார்- மட்டக்களப்பு, சகாப்தீன் ஆஷாத் காமில் – திருகோணமலை ஆகியோரும், இலக்கியத் துறைக்காக. எம்.ஐ.அச்சிமுகம்மது- அம்பாறை, எம்.எல்.பாத்திமா ந(க)ப்லா -அம்பாறை, ஏஎல். முகம்மது இர்ஷாத்- மட்டக்களப்பு, திருமதி. சிறிசெல்வம் ஜெயசிறி – திருகோணமலை, திருமதி. சுஜந்தினிதேவி யுவராஜா-திருகோணமலை ஆகியோர் விருது பெறுகின்றனர்.

ஆற்றுகைத் துறையில் சுகிர்தராஜா சபேசன் -அம்பாறை, குமாரவடிவேல் குமாரதாசன் -அம்பாறை ஆகியோரும் குலசிங்கம் கிலசன் – அம்பாறை, ஏ.ஆர், முகம்மது நௌபீல் -அம்பாறை ஆகியோர் ஊடகத்துறைக்காகவும், நுண்கலைத் துறைக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த வடிவேல் திலீபன் விஐருது பெறுகிறார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த ரி. கிறேசன் பிரசாந்த், குழந்தைவேல் கோடீஸ்வரன் ஆகியோர் குறும்படத்துறைக்காக விருது பெறுகின்றனர். கலை இலக்கியத்துக்காக செல்வி. பிஏ.நதீகா பிரியதர்சினி- அம்பாறை, பி.எச்.நிஸ்ஸங்க- அம்பாறை, செல்வி. டி.ஏ.திலங்ஜலா நயனதாரா -அம்பாறை, எம்.சுரஞ்சித் லக்சிறி செனவிரத்ன -அம்பாறை ஆகியோரும், . ஜே.ஆர்.எஸ்.நயனஜித் ரணவீர- திருகோணமலை, செல்வி. டீ.எம்.லக்மாலி சுதேஷணி – அம்பாறை ஆகியோர் விருது பெறுகின்றனர்.

அத்துடன், புலமைசார் ஆய்வு, அறிவியலும் தொழில் நுட்பமும், சிறுகதை, கவிதை, வரலாறு, சிறுவர் இலக்கியம், நானாவிதம், இலக்கியச் சஞ்சிகை, ஆன்மீகம், ஆயர்வேதம் ஆகிய 11 துறைகளில் வெளியிட்ட நூல்களுக்காக 11 பேருக்கு கிழக்கு மாகாண சாகித்திய பரிசும் வழங்கப்படவுள்ளது என்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News