கிழக்கு மாகாணத்தில் பலத்த மழை

கிழக்கு மாகாணத்தில் பலத்த மழை பெய்யக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலதிக செய்திகளுக்கு:-  Minna24news

இவற்றையும் பார்வையிடலாம் :- மட்டக்களப்பு உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை