-மூதூர் நிருபர்-
மூதூர் வலயக்கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள கிளிவெட்டி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் பீ.கோணேஸ்வர ராசா தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.
இதன் போது மாணவ மாணவிகளின் விளையாட்டு நிகழ்வுகள், அணிநடை உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் போட்டி நிகழ்வுகளும் பார்வையாளர்களுக்கு விருந்தளித்தன.
நிகழ்வில் அதிதிகளாக மூதூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றமீம், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் கணணி வளநிலைய முகாமையாளர் எம்.எம்.ஜனூஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி ஈட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசீல்களை வழங்கி வைத்தனர்.