கிண்ணியாவில் 12 உணவகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையானது உணவு ஒவ்வாமை சர்ச்சையினால் நேற்று இரவு (2025-7-23)ம் திகதி அன்று திகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்ஏ.எம்.எம்.அஜித் அவர்களின் தலைமையில் உணவகங்கள் விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் வைத்திருந்தவர்கள், சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எதிராக 20 குற்றச்சாட்டியின் கீழ் 12 வர்த்தகர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இரண்டு உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எதிர் வரும் காலங்களில் ஏனைய வர்த்தக நிலையங்களும் திடீர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட உள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.