அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
281 ரி -56 தோட்டாக்கள், ஐந்து மெகசின்கள் மற்றும் 84 எஸ் துப்பாக்கிக்கான 6 தோட்டாக்கள் உட்பட பெருமளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குறித்த கான்ஸ்டபிள் 2022 ஆம் ஆண்டு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.