இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை காதலன் அல்லது காதலி தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்த அறிவிப்பின் படி தோற்றத்தில் அல்ல, வாழ்க்கையில் அழகாக இருங்கள் என்ற தொனியின் கீழ், உங்கள் காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், விரைவில் பொலிஸாருக்க தகவல் தெரிவிக்குமாறு இலங்கை அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் சொந்த நலனுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் பொலிஸாரை ஆதரிக்குமாறும் இலங்கை பொலிஸ் திணைக்கள முகநூல் பக்கத்தில் பதிவொன்று இடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான செயல்கள் தொடர்பில் அறிந்தால் 119 அல்லது 1997 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.