கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பல்பணி உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.