யாழில் கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ் புலோலியை சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது – 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திடீர் வயிற்று வலியினால் துடித்த அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உடற்கூற்று பரிசோதனையின் போது, கர்ப்பப்பை குழாயினுள், கரு தங்கியமையால் கர்ப்பப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.