கருப்பை மாற்று சத்திரகிசிச்சை மூலம் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தனது தாயரின் கருப்பையை பெற்றுக்கொண்ட கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண்மணியே 16 மணிநேர கருப்பை மாற்று சத்திரசிகிச்சையினை தொடர்ந்து மூன்று மாதத்தின் பின்னர் கேர்ஸ்டி பிரையன்ட் கருத்தரித்து ஹென்றி என்கிற ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
ஆரோக்கியமான அழுகையுடன் புதிய வரலாற்றை படைக்கின்றேன் என்ற உணர்வுடன் ஹென்றி பிறந்தான் என மருத்துவர் ரெபேக்கா டீன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது 25 வருட கூட்டு ஆராய்ச்சியின் பலாபலன் என தெரிவித்துள்ள மருத்துவர் சர்வதேச அளவில் விடாமுயற்சியின் உச்சக்கட்டம் இதன் காரணமாகவே அவுஸ்திரேலியாவில் இவ்வாறான முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.