பொதுவாக கடற்பரப்பில் பல வகையான மீன் இனங்கள் சுற்றித்திரிந்துக் கொண்டு தான் இருக்கும் அப்படி அனைவரையும் வியந்து பார்க்கும் அளவில் வித்தியாசமான ஒரு பிங்க் நிறத்தில் இருக்கும் டொல்பின் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த வாரம் லூசியானா கடற்பகுதியில் ஒரு அரிய இளஞ்சிவப்பு டொல்பின் ஒன்று நீந்திச் சென்றிருக்கிறது.
ஹூஸ்டனைச் சேர்ந்த தர்மன் கஸ்டின் என்பவர் ஜூலை 12ஆம் திகதி பழைய ரிவர் பாஸில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மெக்சிகோ வளைகுடாவிற்கு அருகிலுள்ள கேமரூன் பாரிஷில் இரண்டு பிங்க் டால்பின்களைப் பார்த்ததாக முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து, விஞ்ஞானி கிரெக் பார்ஷ் நேஷனல் ஜியோகிராஃபிக்கிடம் தெரிவிக்கையில், அல்பினோ டொல்பின்கள் மரபணு மாற்றத்தைக் கொண்டிருப்பதால் அவற்றின் தோல் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தோன்றும் என்று கூறினார்.
மேலும், ப்ளூ வேர்ல்ட் இன்ஸ்டிடியூட் கூற்றுப்படி, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இதுவரை 20 அல்லது அதற்கு மேற்பட்ட காட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன இது மிகவும் அரிதான காட்சியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.
அல்பினோ டொல்பின்கள், உண்மையில், குஸ்டின் இளஞ்சிவப்பு டொல்பின்களைக் கண்ட பகுதியில் காணப்படுகின்றன. அவர்களில் ஒருவருக்கு ‘பிங்கி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.