இலங்கையில் கடன் அட்டைகளின் வட்டி வீதம் குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.
நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்களும் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், கடன் அட்டைகளின் வட்டி வீதத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.